எனக்கும் வாழப்பிடித்தது

அன்றொருநாள் ஏனோ எனக்கும் வாழப்பிடித்தது
உன்னை எண்ணி தினம் ஏங்கப்பிடித்தது
எனக்கு எனோ உன்னைப்பிடித்தது
தூக்கம் மறந்த கனவு பிடித்தது
உனக்குள் எனோ கண்ணைப் பிடித்தது
எனக்குள் நானே கண்டுபிடித்தது
உன்னை எனக்கு மிகவும் பிடித்தது
காலைவேளையில் பனிச்சாரல் பிடித்தது
உன் காலைத்தழுவும் கொலுசும் பிடித்தது
மாலை வேளையில் மல்லிகை பிடித்தது
மல்லிகை சூடிய உன் கூந்தலும் பிடித்தது
தினமும் உன்னைக் காணப்பிடித்தது
காணாவிட்டால் பைத்தியம் பிடித்தது
கடற்கரை ஓரம் மழைத்துழி பிடித்தது
உன் பேச்சில் உதிர்ந்த தேன் துளி பிடித்தது
உன் நெற்றியின் கீழே புருவங்கள் பிடித்தது
என் வெற்றியை உன்னுடன் பகிர்ந்திட பிடித்தது
என் கண்களில் உன்விம்பம் விழுந்திடப்பிடித்தது
உன் விம்பத்தில் தினமும் விழித்திடப்பிடித்தது
மலர்களுடன் பேச மனதுக்கு பிடித்தது
என்றென்றும் என் நினைவில் நீ வரப்பிடித்தது
உன்னை எண்ணி விழித்திருக்கப் பிடித்தது
தூக்கத்தில் கூட நீ வரப்பிடித்தது
வாழ்க்கை முழுவதும் தனிமை பிடித்தது
நீ மட்டும் மறந்தால் மரணமே மிகப்பிடித்தது.
உன்னை எண்ணி தினம் ஏங்கப்பிடித்தது
எனக்கு எனோ உன்னைப்பிடித்தது
தூக்கம் மறந்த கனவு பிடித்தது
உனக்குள் எனோ கண்ணைப் பிடித்தது
எனக்குள் நானே கண்டுபிடித்தது
உன்னை எனக்கு மிகவும் பிடித்தது
காலைவேளையில் பனிச்சாரல் பிடித்தது
உன் காலைத்தழுவும் கொலுசும் பிடித்தது
மாலை வேளையில் மல்லிகை பிடித்தது
மல்லிகை சூடிய உன் கூந்தலும் பிடித்தது
தினமும் உன்னைக் காணப்பிடித்தது
காணாவிட்டால் பைத்தியம் பிடித்தது
கடற்கரை ஓரம் மழைத்துழி பிடித்தது
உன் பேச்சில் உதிர்ந்த தேன் துளி பிடித்தது
உன் நெற்றியின் கீழே புருவங்கள் பிடித்தது
என் வெற்றியை உன்னுடன் பகிர்ந்திட பிடித்தது
என் கண்களில் உன்விம்பம் விழுந்திடப்பிடித்தது
உன் விம்பத்தில் தினமும் விழித்திடப்பிடித்தது
மலர்களுடன் பேச மனதுக்கு பிடித்தது
என்றென்றும் என் நினைவில் நீ வரப்பிடித்தது
உன்னை எண்ணி விழித்திருக்கப் பிடித்தது
தூக்கத்தில் கூட நீ வரப்பிடித்தது
வாழ்க்கை முழுவதும் தனிமை பிடித்தது
நீ மட்டும் மறந்தால் மரணமே மிகப்பிடித்தது.
______________________________________________________________________________________________
புரியாக்காதல்

மண் மீது நான் வாழும் வரை என் உயிரோடு
உனை தாங்கி செல்வேன்
என் உயிர் பிரியும் காலம் ஒன்று வந்தால்
என் கல்லறைசுவர்களை உன் நினைவுகளின்
வடுக்களாக மாற்றிக்கொள்வேன்.....
என் உயிர் பிரியும் காலம் ஒன்று வந்தால்
என் கல்லறைசுவர்களை உன் நினைவுகளின்
வடுக்களாக மாற்றிக்கொள்வேன்.....
என் சோகமதில் கண்ணீராய் நீ வருகிறாய்
என் சந்தோசமதில் சிரிப்பு ஒளியாக நீ வருகிறாய்
நான் வாங்கும் உயிர் மூச்சிலும் கூட பொக்கிசாமாக
நீதான் புதைந்து வாழ்கிறாய் .....
என் சந்தோசமதில் சிரிப்பு ஒளியாக நீ வருகிறாய்
நான் வாங்கும் உயிர் மூச்சிலும் கூட பொக்கிசாமாக
நீதான் புதைந்து வாழ்கிறாய் .....
கண்மணியே ஒவ்வொரு நொடிகளிலும் என் உயிரில்
வைத்து தாலாட்டுகிறேன் உன்னை
ஆனாலும் எட்டி எட்டி நின்று தினம்தோறும் எதற்காக
வெறுத்துப்பார்கிறாய் நீ என்னை
காதலை சொல்லிய பின்பும் பல காலம் கழிந்த பின்பும்
மௌனங்களை தவிர வேறேதும் உன்னிடம் இருந்து
என்னை சரனைடையவில்லை.....
வைத்து தாலாட்டுகிறேன் உன்னை
ஆனாலும் எட்டி எட்டி நின்று தினம்தோறும் எதற்காக
வெறுத்துப்பார்கிறாய் நீ என்னை
காதலை சொல்லிய பின்பும் பல காலம் கழிந்த பின்பும்
மௌனங்களை தவிர வேறேதும் உன்னிடம் இருந்து
என்னை சரனைடையவில்லை.....
பரவயில்லை கண்மணியே என் ஆயுள் அழியும்வரை காத்திருப்பேன்
விடை காண என் காதல் விடை காணும் வரை
உலகில் புரியா காதல் என் காதல்தான்
உலகம் அழிந்தாலும் அழியாக்காதலும் என் காதல்தான்.
விடை காண என் காதல் விடை காணும் வரை
உலகில் புரியா காதல் என் காதல்தான்
உலகம் அழிந்தாலும் அழியாக்காதலும் என் காதல்தான்.
______________________________________________________________________________________________
எங்கிருந்து வந்தாய் எங்கே போகிறாய்

உயிரே எங்கே செல்ல போகிறாய் நீ
சாய்ந்த கூட்டின் ஓரத்தில்
ஒரு விழித் துளியின் கேள்விகருவறையில் குடிபுகுந்தேன்
உருவெடுக்க உயிரானாய்
உலக பந்தில் சின்ன பாதம் பதித்தேன்
வாழ்க்கை படகில் கூட்டி சென்றாய்கிழையிலே துளிராக இலையிலே
நரம்பாக ஊருக்கும் துணையானேன்
என் வாழ்விற்கு வரப்புயர் நீர் வார்த்தாய்நெல்லுக்குச் செல்லும் நீரோடையில்
புல்லுக்கும் கசிந்துருகி எண்ணச் சிறகு
விரித்து பட்டாம் பூச்சியாய் பறந்தேன்
புவி வாழ்வின் தீ மேலே விட்டில் தான்
யாவரும் என இன்று உணர வைதாய்நாலு கால் தவழ்ந்து இரு கால் நடந்து
மூன்று காலூன்றி நான்கு தோழ்களின்
துணையோடு விடை பெறும் நேரம் இது
விழித் துளியின் கேள்விக்கு
விடை என்ன தரப்போகிறாய்
எங்கிருந்து வந்தாய் நீ எங்கே போகிறாய்
சொல்லாமல் சொல்லிவிடு நிச்சயமாய்
யாரிடமும் சொல்ல மாட்டேன்.______________________________________________________________________________________________வேட்டைக் காறர்கள்


ஒரு விழித் துளியின் கேள்வி
உருவெடுக்க உயிரானாய்
உலக பந்தில் சின்ன பாதம் பதித்தேன்
வாழ்க்கை படகில் கூட்டி சென்றாய்
நரம்பாக ஊருக்கும் துணையானேன்
என் வாழ்விற்கு வரப்புயர் நீர் வார்த்தாய்
புல்லுக்கும் கசிந்துருகி எண்ணச் சிறகு
விரித்து பட்டாம் பூச்சியாய் பறந்தேன்
புவி வாழ்வின் தீ மேலே விட்டில் தான்
யாவரும் என இன்று உணர வைதாய்
மூன்று காலூன்றி நான்கு தோழ்களின்
துணையோடு விடை பெறும் நேரம் இது
விழித் துளியின் கேள்விக்கு
விடை என்ன தரப்போகிறாய்
எங்கிருந்து வந்தாய் நீ எங்கே போகிறாய்
சொல்லாமல் சொல்லிவிடு நிச்சயமாய்
யாரிடமும் சொல்ல மாட்டேன்.
வேட்டைக் காறர்கள்
சிரிப்புட்டும் சினிமாக்களாய்
அசைமீட்டும்
பச்சை குத்தப்பட்ட சுவரொட்டிகள்
இவர்களின் வரவை அடையாளப்படுத்தும்...
பச்சை குத்தப்பட்ட சுவரொட்டிகள்
இவர்களின் வரவை அடையாளப்படுத்தும்...
மேடைகள் தோறும்
போலிவாக்குறுதி கட்டப்பட்ட பட்டங்கள்
காற்றில்லாமலே பறக்கவிடப்படும்...
போலிவாக்குறுதி கட்டப்பட்ட பட்டங்கள்
காற்றில்லாமலே பறக்கவிடப்படும்...
தகரத்தை தங்கமாய் காய்ச்சும்
சலங்கை கட்டிய புனைகளாய் ஒலிக்கும்
வாய்ப்பேச்சுக்கள்
மக்களை நம்பிக்கையின்
சிகரத்தை எட்டவைக்கும்...
சலங்கை கட்டிய புனைகளாய் ஒலிக்கும்
வாய்ப்பேச்சுக்கள்
மக்களை நம்பிக்கையின்
சிகரத்தை எட்டவைக்கும்...
சிதைக்கப்பட்ட
உள்ளங்களின் வடுக்களுக்கு
அகவை கடந்த புத்தகங்கள் புரட்டி
ஒத்தனம் போடுவதாய் - இவர்களின்
பதவி தேடிய நாடகங்கள் அரங்கேறும்...
உள்ளங்களின் வடுக்களுக்கு
அகவை கடந்த புத்தகங்கள் புரட்டி
ஒத்தனம் போடுவதாய் - இவர்களின்
பதவி தேடிய நாடகங்கள் அரங்கேறும்...
நாற்காலிகள் தக்கவைக்கும் புள்ளடிகள்
வாக்குச்சீட்டை வந்தடைந்தால்
சேவை தேடிய மக்களின் தேடல்
சகதி சுற்றிய தனிமரமாய் - இவர்களை
அடையாளப்படுத்தும்...!
வாக்குச்சீட்டை வந்தடைந்தால்
சேவை தேடிய மக்களின் தேடல்
சகதி சுற்றிய தனிமரமாய் - இவர்களை
அடையாளப்படுத்தும்...!